×

தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை : தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக 10 சதவீதம் அளவிற்கு தேங்காய் எண்ணெய் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதியை குறைத்து தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் விலை அவ்வப்போது வீழ்ச்சி அடைகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப தேங்காயை இறக்குமதி செய்யவும், தேங்காய் விலை குறையும் போது தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும், கொப்பரைத் தேங்காய்க்கான கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்யவும், தென்னை விவசாயிகள் நஷ்டம் அடையும் போது நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிப்படி தென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

The post தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,D.M.K. ,President ,GK Vasan ,Chennai ,T.M.K. ,President GK Vasan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...